8 ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்த ரஷ்யா நீதிமன்றம்

#Court Order #Russia #War #Soldiers
Prasu
10 months ago
8 ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்த ரஷ்யா நீதிமன்றம்

உக்ரைன் போரில் விதியை மீறியதற்காக 8 ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு, ரஷ்யா சிறை தண்டனை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து உக்ரைனில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு, ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முகாமில் சரியான உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகள் இல்லாததாக சில ராணுவ வீரர்கள், தலைமை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 

இதனிடையே உக்ரைன் முகாமில் தங்கியிருந்த 8 ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களது உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பதற்காக, கடந்த டிசம்பர் 24ம் திகதி முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.பின்னர் அவர்கள் ரஷ்யாவின் பிராந்திய நகரமான பொடோல்ஸ்கி நகருக்கு சென்று, ராணுவ சேவையின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து அந்த 8 ராணுவ வீரர்களையும் கைது செய்த பொலிஸார், ராணுவ பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்ட குற்றத்திற்காக சிறையில் அடைத்தனர்.

தற்போது ராணுவ நீதிமன்றத்தில் அந்த 8 ராணுவ வீரர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைன் போர் துவங்கிய சமயத்தில், ராணுவ வீரர்களின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக, ரஷ்ய அரசு சிறை தண்டனையை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது