இங்கிலாந்தில் செவிலியர்களின் போராட்டம் நிறைவுக்கு வருவதாக அறிவிப்பு!

#Lanka4
Thamilini
2 years ago
இங்கிலாந்தில் செவிலியர்களின் போராட்டம் நிறைவுக்கு வருவதாக அறிவிப்பு!

இங்கிலாந்தில் ஊதிய உயர்வுக்கோரி செவிலியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் தொழிற்சங்கம்,  அரசாங்கம் வழங்கிய ஊதிய சலுகைகளை நிராகரித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தது.  

இருப்பினும் தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த ஆணையைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை வாக்கெடுப்புகளை நடத்த வேண்டும்.

இந்த வாக்கெடுப்பில் குறைந்தது 50 வீத ஆதரவை பெற வேண்டும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 43 வீதமான ஆதரவை  மட்டுமே பெற்றிருந்தது. 

ஆகையால் செவிலியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!