வாக்னர் படையினருக்கு 86 பில்லியன் ரூபிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!
#Russia
#Lanka4
Thamilini
2 years ago
வாக்னர் கூலி படையினருக்கு ரஷ்ய அரசாங்கம் நிதியளித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
மே 2022 முதல் இந்த ஆண்டு மே வரை வாக்னர் குழுவினருக்கு 86 பில்லியன் ரூபிள் வழங்கியதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் கூலிப்படையினர் ரஷ்யாவிற்கு சார்பாக உக்ரைனில் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் வக்னர் படையினரின் தலைவரான ப்ரிகோஜின் தனது துருப்புக்களுக்கு ரஷ்ய அரசால் போதுமான பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டினர்.
தமக்கு ரஷ்ய அரசு அநீதி இழைத்துள்ளதாக குறிப்பிட்டு மொஸ்கோவை முற்றுகையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.