எல் சால்வடோரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
எல் சால்வடோரின் பசுபிக் கடற்கரையில் கிட்டத்தட்ட 70 கிலோமீட்டர் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் நேற்று (18.07) மாலை பதிவாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் எல் சால்வடாரின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிகரகுவா துணை ஜனாதிபதியும் முதல் பெண்மணியுமான ரொசாரியோ முரில்லோவும் அந்த நாட்டில் உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று கூறினார்.