அனுராதபுர மாவட்ட எம்பியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

#Sri Lanka #Parliament #Anuradapura #Gun_Shoot
Benart
1 week ago
அனுராதபுர மாவட்ட எம்பியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 நேற்றிரவு லஹிரு விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் இருந்து தனது தனிப்பட்ட காரில் அனுராதபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 நேற்று இரவு 10.20 மணி முதல் 10.30 மணி வரை துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

 துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சிறிது சேதமடைந்ததுடன், எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை.

 துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர் அல்லது சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 காரில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு