கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

#Canada #Earthquake #Lanka4 #லங்கா4 #நிலநடுக்கம் #Canada Tamil News #Tamil News
கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 குறித்த பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3.9 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் தீவுகளின் ஹார்ட் துறைமுகத்தின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

images/content-image/1698249901.jpg

 இந்த நில அதிர்வினால் எவ்வித சேதங்களும் ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய நில அதிர்வு திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

 பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அடிக்கடி இவ்வாறு சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!