2024ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை 2.6% உயர்வு

சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீட்டு வாடகைகள் அதிகரித்துள்ளன.
2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை 2.6 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
நேற்று, வெளியான Homegate Rent Index என்னும் ஆய்வமைப்பின் ஆய்வு முடிவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
Swiss Marketplace Group என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான Martin Waeber என்பவர், இந்த வீட்டு வாடகை உயர்வில் இப்போதைக்கு மாற்றம் ஏற்படப்போவதில்லை என்கிறார்.
மாறாக, இன்னமும் வாடகை உயர்வு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒரு காரணம் என்னவென்றால், புதிய கட்டிடங்கள் கட்டுதல் வரும் மாதங்களில் அதிகரிக்கப்போவதில்லை என்பதால், ஏற்கனவே நிலவும் வீடுகள் தட்டுப்பாடு மேலும் மோசமடையவே உள்ளது.
என்றாலும், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரே ஒரு செய்தி உள்ளது. அது என்னவென்றால், வாடகை உயர்வுக்கெதிராக சில பிரேரணைகள் வாக்கெடுப்புக்கு வர உள்ளன என்பதால், மக்கள் சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என எதிர்பார்க்கலாம்.



