வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க அனுரா முயற்சிக்கின்றாரா?
வடக்கு கிழக்கிலே பல தமிழ் கட்சிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள கட்சிகள் ஊடாகவும் தனித்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அதே வேளையிலே தேசியத்தை பேசும் பல கட்சிகள் பிரிந்தும் புதிய புதிய கட்சிகளாக இயங்கிக் கொண்டிருப்பதை நாங்கள் இப்பொழுதும் காண்கின்றோம்.
இருந்தாலும்இந்த கட்சிகளுக்கு உள்ளே இருக்கின்ற பதவி மோகம் போன்ற பல பிரச்சனைகளால் பிரிந்து போய் இருக்கின்றன.
கட்சிகளாகப் பிரிந்தது மாத்திரமல்லாமல் கட்சிகளுக்குள்ளே கிளைகளாக பல கட்சிகளாக பிரிந்து நிற்கின்றன. உதாரணத்துக்கு தமிழரசு கட்சியை கூறலாம். தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.
இதனை அனுராக் கட்சியினரை பாராளுமன்றத்திற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியதனூடாக. இவர்களுக்கு ஒரு பாடத்தை மக்கள் கற்பித்து இருக்கிறார்கள். இருந்தாலும் கூட மேலும் தொடர்ந்தும் அதற்குப் பிற்பாடு இருக்கின்ற காலத்திலும் ஒருவர் மீது ஒருவர் பழியை சுமர்த்துகின்றனர்.
மேலும் இவர்கள் தங்களைத் தாங்கள் உயர்வானவர்களாக கருதி தேசியத்தை விரும்பி கொள்கிறவர்களாக காட்டிக் கொண்டு மக்களை பாழாங்கிணற்றில் தள்ளுவது போல இருக்கின்றது.
அந்த வகையிலே இதை உன்னிப்பாக பார்த்த இலங்கையில் ஆளும் கட்சியாக இருக்கின்ற என்பிபி அனுரா தலைமையிலான கட்சி ஒரு முடிவை எடுத்து இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தீர்வை கொடுக்காவிட்டால் இது ஆளும் கட்சிக்கு இழுக்காக அமையும் என அவர்கள் கருதுகின்றனர்.