டித்வா புயல் தாக்கம்: பரந்தன் நகரை சுத்தப்படுத்த செஞ்சிசிலுவை சங்கதின் கிளிநொச்சி கிளையினர் அழைப்பு
டித்வா புயலின் போது ஏற்பட்ட மழை வெள்ளம் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றாடலிலே தொற்றுநோய் பரவி காணப்படுகிறது .
இந்த நிலையில் சுற்றாடலை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நாடளாவிய தேசிய வேலைத்திட்டதை முன்னெடுத்துள்ளது.
அந்த வகையிலே கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாக பரந்தன் நகர மையப் பகுதியை சுத்தப்படுத்தி திண்மக் கழிவுகளை அகற்றும் செயற்பாட்டினை எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 8 மணி முதல் முன்னெடுக்க இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையினர் தீர்மானித்துள்ளனர்.
எனவே இந்த நிகழ்வில் அரச திணைக்களத்தினர், உட்பட பல்வேறு நிறுவனங்கள் பங்குபெற்ற இருப்பதன் காரணமாக மக்களை குறித்த செயற்பாட்டில் கைகோர்த்து சுற்றாடலை தூய்மைப்படுத்தி ஒரு அழகிய நகரத்தை பேணுவதற்காக உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கொள்கிறோம்.
அத்துடன் வர்த்தக சங்கம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளையும் அந்த செயற்பாட்டில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.