இந்தியா பீஹார் மாநிலத்தில் கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலம் மீண்டும் இடிந்து வீழ்ந்தது.
#India
#Lanka4
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
இந்தியாவில் கங்கை நதியின் மீது நிர்மாணிக்கப்பட்டுவந்த பாலம் மீண்டும் இரண்டாவது தடவையாக இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014 ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதீஷ் குமார் இப்பாலத்தை திறந்து வைத்திருந்தார். கடந்த வருமும் இப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது.
தற்போது 1,700 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாலம் ககாரியா, பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பாலம் இடிந்தமை குறித்து விசாரணை நடந்த முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.