ஈரான் தனது ஏவுகணையான ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட பட்டா வினை அறிமுகம் செய்துள்ளது.
#world_news
#Missile
#Lanka4
#Iran
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடிய (ஹொப்பா்சோனிக்) தங்களது ஏவுகணையை ஈரான் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
‘எதிரிகளின் நிலங்களை வெல்பவா்’ என்ற பொருள்படும் வகையில் ‘ஃபட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ஒலியைப் போல் 15 மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லும் எனவும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் அதனை இடைமறித்து அழிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், 1,400 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை அந்த வகை ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் என்றும் அவா்கள் கூறினா்.