நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஒருவர் பேர் உயிரிழந்தனர், 25 பேர் மாயம்
#Death
#world_news
#Flood
#Nepal
#Breakingnews
Mani
2 years ago
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கனமழையைத் தொடர்ந்து சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இது தவிர, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மொத்தம் 25 பேர் தற்போது காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.