இலக்கிய பணிக்காக ஜெர்மன் பரிசு வென்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

#Award #Germany
Prasu
2 years ago
இலக்கிய பணிக்காக ஜெர்மன் பரிசு வென்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. 

அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும் இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சல்மான் ருஷ்டி, இலக்கிய புதுமை, நகைச்சுவை, அறிவுக்கூர்மை ஆகியவற்றுடன் எழுதி வருவதாக விருது நடுவர் குழு கூறியுள்ளது.

 அக்டோபர் 22-ந் தேதி, பிராங்க்பர்ட் நகரில் நடக்கும் விழாவில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. 1950-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இப்பரிசு, 25 ஆயிரம் யூரோ (ரூ.22 லட்சத்து 25 ஆயிரம்) பரிசுத்தொகை கொண்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!