மக்கள் தொகையை அதிகரிக்க வெளிநாட்டினருக்கு அழைப்பு விடுக்கும் அயர்லாந்து அரசு

#Tourist #government #Ireland
Prasu
2 years ago
மக்கள் தொகையை அதிகரிக்க வெளிநாட்டினருக்கு அழைப்பு விடுக்கும் அயர்லாந்து அரசு

வெளிநாடுகளில் சென்று குடியேற வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் நமது கனவிற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது பணம் மட்டுமே. நடுத்தர மக்கள் அனைவருக்கும் வெளிநாட்டு பயண ஆசை இருந்தும் பணம், குடியுரிமை பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அந்த கனவு தகர்ந்து போகிறது.

ஆனால் ஒரு நாடு உங்களுக்கு குடியுரிமையும் தந்து அங்கு குடியேறுவதற்கு பணமும் தருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு அறிவிப்பை தான் அயர்லாந்து அரசு வெளியிட்டு உள்ளது. 

'அவர் லிவிங் ஐலேண்ட்' என்ற திட்டத்தின் மூலம் அயர்லாந்து அரசு தங்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள தீவுகளில் வெளிநாட்டினரை குடியேற்ற முடிவு செய்துள்ளது. 

அந்த திட்டத்தின் நோக்கம் என்ன ? பணம் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ? யாரெல்லாம் குடியுரிமை பெறலாம் ? என்பவை குறித்து பார்க்கலாம். அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகை கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. அதனால் அயர்லாந்தில் உள்ள பல தீவுகளில் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது. 

ஒரு சில தீவுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100க்கும் கீழே குறைந்து காணப்படுகிறது. மக்கள் தொகையை அதிகரிக்க "அவர் லிவிங் ஐலேண்ட்" என்னும் திட்டத்தை அயர்லாந்து அரசு செயல்படுத்த உள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதோடு 80 ஆயிரம் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதன் விதிமுறைகள் சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!