இவ்வருடத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 38 பேர் பலி..!
#SriLanka
#people
#GunShoot
Soruban
5 months ago
இலங்கையின் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 73 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 43 பேர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் காயமடைந்துள்ளனர். மேலும் 24 துப்பாக்கி தாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு உதவி செய்த குற்றத்திற்காக 150 பேரும்,
மோட்டார் சைக்கிள்களை செலுத்திய குற்றத்திற்காக 15 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
